மக்களின் இயல்பு வாழ்வை குலைப்பதற்கு எவருக்கும் இடமில்லை! வடமாகாண ஆளுநர் திட்டவட்டம்..

ஆசிரியர் - Editor I
மக்களின் இயல்பு வாழ்வை குலைப்பதற்கு எவருக்கும் இடமில்லை! வடமாகாண ஆளுநர் திட்டவட்டம்..

வடமாகாணத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்வை குழப்பும் வகையில் செயற்படுவோர் மீது சட்டம் பிரயோகிக்கப்படும். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். 

யாழ்.மாவட்டத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை தொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடமாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை குழப்பும் வகையில் செயற்படுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு அவர்கள் தொடர்பான விடயங்களை ஆளுநர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

பல சட்ட விரோத செயல்களை நாம் பார்த்திருக்கிறோம். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு நபர் மீது தாக்குதல், சாலையில் இரு குழுக்களிடையே மோதல், தற்போது நீதிமன்றத்தில் உள்ள தனியார் நிலத்துக்குள் 

வலுக்கட்டாயமாக நுழைத்தல், மற்றும் அத்துமீறி நுழைத்தல், பேருந்து மீது கல்லெறிதல் ஆகியவை அடங்கும். இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.

வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருடனும் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே வடமாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை குழப்புவதற்கும் சட்டவிரோத செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் யாருக்கும் இடம் வழங்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு