ஆப்கானிஸ்தான் - தலிபான் உடன்டிக்கை நீடிக்கப்பட்டது !
ரம்ஜான் விழாக்காலத்தை ஒட்டி தாலிபனுடன் ஏற்படுத்திக்கொண்டதற்காலிக சண்டை நிறுத்த உடன்பாட்டை நீட்டிப்பதாக ஆஃப்கானிஸ்தான் அரசாங்கம் தன்னிச்சையாக அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக்கொண்டு தாலிபன்கள் அமைதிப் பேச்சுவார்தைக்கு வர வேண்டுமென்று அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி வலியுறுத்தியுள்ளார்.
அசாதாரண நிகழ்வாக, தாலிபன் தீவிரவாதிகள் அங்குள்ள பாதுகாப்புப்படையினரை தழுவியதுடன், பொதுமக்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.
"தாலிபன்கள் முன்வைத்த அனைத்து பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து சமாதான பேச்சுவார்த்தையின்போது கலந்துரையாடுவதற்குத் தயாராக உள்ளோம்" என்று அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ளார்.