SuperTopAds

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய பிரான்ஸ்

ஆசிரியர் - Admin
அவுஸ்திரேலியாவை வீழ்த்திய பிரான்ஸ்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மதியம் 3.30 மணிக்கு கசன் அலினாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்துஇ ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நட்சத்திர வீரர் அண்டோனி கிரீஸ்மேன் 58 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை வகிக்க வைத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் மைக் ஜெடினக் 62-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகித்தன.

இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் பவுல் போக்பா ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் பிரான்ஸ் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்துஇ ஆஸ்திரேலியா அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில்இ பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பெற்றது.