செல்வாக்கை பயன்படுத்தி 10 வருடங்களுக்கும் மேல் இடமாற்றம் இல்லாமல் இருக்கும் அதிபர்கள் சிலராலேயே மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இடமாற்றம்...

ஆசிரியர் - Editor I
செல்வாக்கை பயன்படுத்தி 10 வருடங்களுக்கும் மேல் இடமாற்றம் இல்லாமல் இருக்கும் அதிபர்கள் சிலராலேயே மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இடமாற்றம்...

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரான வரதீஸ்வரனை கடமை செய்ய விடாமல் சிலரின் அதீத தலையீடுகள் இருந்தமை காரணமாக கல்வி அமைச்சர்களின் செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்படவுள்ளதாக அறிய முடிகிறது. 

குறிப்பாக யாழ்.மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டம் செல்லாத சுமார் 44 பேர் 15 வருடங்களுக்கு மேலாக யாழ்.மாவட்டத்திலே தங்கி உள்ளனர். இவர்களை இடமாற்றுவதற்காக கடந்த வருடம் நடுப்பகுதியில் 

முதற்கட்டமாக 22 பேரை இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் மேற்கொண்டார். 22 அதிபர்களின் 3 பெண் அதிபர்கள் தமக்கு வழங்கப்பட்ட வெளிமாவட்ட இடமாற்றத்தினை தடுப்பதற்காக 

தமது கணவன்மார்களை இணைத்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு உள நீதியான அச்சுறுத்தலை விடுத்ததாக அறிய முடிகிறது. குறித்த இடமாற்றத்தில் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியரின் மனைவி,

பல்கலைக்கழகத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவரின் மனைவி மற்றும் வைத்தியத்துறையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் மனைவி ஆகியோர் குறித்த இடமாற்றத்திற்குள் அகப்பட்டமையே 

இடமாட்டத்தை நிறுத்த வேண்டிய நிலைக்குத் காரணம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அதிபர்கள் செல்லாத நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் 200க்கும் மேற்பட்ட பாடசாலைகள் 

நிரந்தர அதிபர் இல்லாமல் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அண்மையில் வடமாகாண ஆளுநரின் செயலாளரை சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை ஆசிரியர் சேவா சங்கம் பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை 

உரிய முறையில் நிரப்புமாறும் வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் அதிபர்கள் ஆசிரியர்களை தமது சொந்த இடங்களுக்கு அனுமதிக்குமாறு கோரி எழுத்து மூலமாக கடிதத்தை வழங்கினர். 

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பல ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் வெளி மாவட்டங்களில் கடமை ஆற்றி வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு சிலர் தமது மனைவிமார்களுக்காக

கல்வி அமைச்சின் செயலாளரை நிர்பந்தித்ததன் பின்னணியில் அவருக்கான இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு