SuperTopAds

முல்லைத்தீவு - கள்ளப்பாடு-வடக்கு றோயல் முன்பள்ளியில் விளையாட்டு விழா..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு - கள்ளப்பாடு-வடக்கு றோயல் முன்பள்ளியில் விளையாட்டு விழா..

முல்லைத்தீவு - கள்ளப்பாடு-வடக்கு றோயல் முன்பள்ளியில் சிறார்களுக்கான விளையாட்டு விழா இடம்பெற்றது. இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன்  கலந்துகொண்டார்.

இந் நிகழ்வானது நேற்று பிற்பகல் 04:00மணியளவில், கள்ளப்பாடு, வடக்கு பொதுநோக்கு மண்டக வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வினை முன்பள்ளியின் முதன்மை ஆசிரியர் தலைமையேற்று நடாத்தினார்.

விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வானது, மங்கல விளக்கேற்றல், விருந்தினர் உரைகள் என நடைபெற்று அதன்பின்னர் சிறார்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. 

நிகழ்வின் இறுதியில் விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டிய சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்கள் சிறார்களுக்கு பரிசில்களை வழங்கினர்.

இந் நிகழ்வின் விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் , திரு.கு.சிவசுப்பிரமணியம் (முன்பள்ளிகளின் உதவிக்கல்விப் பணிப்பாளர்), 

திரு.க.சிவநேசன் (சிவில் பாதுகாப்பு இணைப்பாளர்), திருமதி.சி.கலாமலர் (முன்பள்ளிகளின் இணைப்பாளர்), திருமதி.பி.சந்திரகலா (சிவில் முன்பள்ளிகளின் இணைப்பாளர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சிறார்கள், சிறார்களின் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.