SuperTopAds

பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடு!! -ஆப்கானிஸ்ததான் அணிக்கு எதிரான தொடரை ரத்துச் செய்தது அவுஸ்ரேலியா-

ஆசிரியர் - Editor II
பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடு!! -ஆப்கானிஸ்ததான் அணிக்கு எதிரான தொடரை ரத்துச் செய்தது அவுஸ்ரேலியா-

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகவிருந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து அவுஸ்ரேலியா விலகியுள்ளது. 

அரசாங்கம் உட்பட முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரியம் அறிக்கையை வெளியிட்டது. 

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மேலும் கட்டுப்பாடுகள் குறித்த ஆளும் தலிபான்களின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.