யுத்த நிறுத்தத்திற்கு பின் தீவிரமடையும் தாக்குதல்!! -30 உக்ரைனிய இராணுவத்தை சூறையாடிய ரஷ்யா-

ஆசிரியர் - Editor II
யுத்த நிறுத்தத்திற்கு பின் தீவிரமடையும் தாக்குதல்!! -30 உக்ரைனிய இராணுவத்தை சூறையாடிய ரஷ்யா-

யுத்த நிறுத்தம் நிறைவடைந்த பின் நடத்தப்பட்ட தாக்குதலில் 30 உக்ரைன் இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான யுத்தம் 11 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 36 மணி நேர யுத்த நிறுத்தத்தை ஜனாதிபதி புடின் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அறிவிப்புகளை அவருடைய ரஷ்ய படைகளே மதிக்கவில்லை என்று உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.

அத்துடன் ரஷ்ய ஜனாதிபதியின் இத்தகைய யுத்த நிறுத்த நடவடிக்கையை ஏற்க முடியாது எனவும் உக்ரைன் அறிவித்து இருந்தது.

30 உக்ரைனிய வீரர்கள் பலி

இந்நிலையில் யுத்த நிறுத்தம்  நிறைவடைந்ததை தொடர்ந்து, இருநாட்டு படைகளும் மீண்டும் போர் தாக்குதலில் குதித்துள்ளனர்.

சனிக்கிழமையன்று  கார்கிவின் குபியன்ஸ்க் (kupiansk) திசையில் நடந்த சண்டையில் ரஷ்ய படைகளால் குறைந்தது 30 உக்ரேனிய இராணுவத்தினர் வரை கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி, லெப்டினன்ட்-ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அத்துடன் சுதந்திர பகுதிகளாக அறிவிக்கப்பட்ட லுகான்ஸ்க் மக்கள் குடியரசின் (எல்பிஆர்) நோவோசெலோவ்ஸ்கி பிராந்தியத்திலும், கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள சின்கோவ்காவைச் சுற்றியுள்ள பகுதியிலும், ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனின் ஆயுதப் படைகளின் ஆயுதக் குவியலுக்கும் சேதம் விளைவித்ததாக கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் காலாட்படை வீரர், போர் வாகனங்கள், கவசப் பணியாளர் கேரியர் மற்றும் இரண்டு கார்கள் அழிக்கப்பட்டதாக தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு