வீட்டின் கூரை வழியாக வீட்டுக்குள் நுழைந்து சுமார் 70 லட்சம் பெறுமதியான 44.5 பவுண் நகைகள் திருட்டு! 3 நாட்களில் திருட்டு கும்பலை மடக்கி, நகைகளை மீட்ட பொரிஸார்…

ஆசிரியர் - Editor I
வீட்டின் கூரை வழியாக வீட்டுக்குள் நுழைந்து சுமார் 70 லட்சம் பெறுமதியான 44.5 பவுண் நகைகள் திருட்டு! 3 நாட்களில் திருட்டு கும்பலை மடக்கி, நகைகளை மீட்ட பொரிஸார்…

மட்டக்களப்பு - ஓட்டமாவடி பகுதியில் திருடப்பட்ட சுமார் 70 லட்சம் ரூபாய் பெறுமதியான 44.5 பவுண் நகைகள் 3 நாட்களில் மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் கடந்த 03ம் திகதி ஆசிரியர்களான தம்பதிகளின் வீட்டில் அவர்கள் பாடசாலைக்கு சென்றதன் பின்னர் காலை வேளையில் வீட்டின் கூரை வழியாக வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன் அலுமாரியில் வைத்திருந்த 44.5 பவுன் (356கிராம்) தங்க நகைகளை திருடிக் கொண்டு வீட்டிற்கு வெளியில் யாரும் வருகின்றார்களா என்று அவதானித்துக் கொண்டு நின்ற நண்பரின் உதவியுடன் திருடர்கள் தப்பிச் சென்றுள்ளனர். 

இத் திருட்டு சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெறும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜி.ஜி.குமாரிஸ்ரீ கருணாரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் நடத்திய தொடர் விசாரணையில் 3வது நாளே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் திருடப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

திருட்டு சம்பவத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் என்ற பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வாழைச்சேனை மற்றும் மீராவோடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரா தெரிவித்தார். 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தொடர்ந்தேர்ச்சியான திருட்டு சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் இதற்கு போதை பாவனையின் அதிகரிப்பே காரணம் என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு