சிறைக்குள் பறந்துவந்த புறா முதுகில் சுமந்து வந்த போதைப்பொருள்!! -திகைத்துப்போன அதிகாரிகள்-

ஆசிரியர் - Editor II
சிறைக்குள் பறந்துவந்த புறா முதுகில் சுமந்து வந்த போதைப்பொருள்!! -திகைத்துப்போன அதிகாரிகள்-

கனடாவின் கொலம்பியா மாகாணத்திலுள்ள சிறைச்சாலை ஒன்றிற்குள் திடீரென பறந்து வந்த புறாவின் கழுத்தில் இருந்த பொருள் என்னவென்று அறிந்த அதிகாரிகள் திகைத்துப்போனார்கள்.

குறித்த சிறையில் கைதிகள் விளையாடும் அல்லது காற்று வாங்கும் பகுதியில் பாதுகாப்பு கடமையில் நின்ற அதிகாரிகள், திடீரென புறா ஒன்று சிறைக்குள் பறந்துவருவதைக் கவனித்துள்ளார்கள்.

அந்த புறாவின் முதுகில், ஒரு பொருள் இருப்பதைக் கவனித்த அதிகாரிகள், நீண்ட நேர முயற்சிக்குப்பின் அந்த புறாவைப் பிடித்துள்ளார்கள்.

அப்போது அந்த புறாவின் முதுகில் இணைக்கப்பட்டிருந்த பைக்குள் ஒரு சிறிய பொட்டலம் இருப்பதைக் கவனித்த அதிகாரிகள் அதற்குள் என்ன உள்ளது என்று பரிசோதிக்க, அதற்குள் போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அண்மைக்காலமாக  ட்ரோன்கள் மூலம் சிறைக்குள் போதைப்பொருட்கள் போடப்படுவதை அறிந்த அதிகாரிகள், அவற்றைக் கட்டுப்படுத்தியதால், போதைப்பொருள் விற்பவர்கள் தற்போது பழங்கால முறையான புறா மூலம் அனுப்பப்பட்டுள்ளமை அதிகாரிகளை மேலும் அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு