10 கோடி ரூபாவுக்கு விற்பனையான ஒரு மீன்!! என்ன இருக்கு அந்த மீனில்?
ஜப்பான் நாட்டின் பாரம்பரிய புதுவருட மீன் ஏலவிற்பனையில், 273,000 அமெரிக்க டொலர்களுக்கு மீன் ஒன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவிலுள்ள டோயோசு (Toyosu) மீன் சந்தையில் புத்தாண்டு பிறந்தவுடன் நடைபெறும் ஏல விற்பனையில் பெருந்தொகை விலைக்கு மீன் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது.
இதன்போது 212 கிலோகிராம் எடையுடைய புளூபின் டூனா (Bluefin tuna / புளூபின் ரூனா) ஒரு மீன் 36.04 மில்லியன் ஜப்பானிய யென்களுக்கு, அதாவது இலங்கை ரூபா மதிப்பில் சுமார் 10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
2019 ஆம் ஆண்டு 278 கிலோகிராம் எடையுடைய புளூபின் டூனா ரக மீன் 336.1 மில்லியன் யென்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
இருப்பினும் கடந்த வருடம் அதிகபட்சமாக 16.88 மில்லியன் யென்களுக்கே மீனொன்று விற்பனை செய்யப்பட்டமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது..