கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு லொட்டரியில் அடித்துள்ள அதிர்ஷ்டம்

ஆசிரியர் - Editor II
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு லொட்டரியில் அடித்துள்ள அதிர்ஷ்டம்

கனடாவில் வாழும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சேர்ந்து வாங்கிய லொட்டரியில் அரை மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளதால் அவர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

ஒன்ராறியோவில் வாழும் ஒரே குடும்பத்தினரான Siobhan Quinlan, Barbara Quinlan, David Quinlan, Andrea Merrick, David Merrick மற்றும் Shannon Steele ஆகியோர் சேர்ந்து அந்த லொட்டரிச்சீட்டை வாங்கியுள்ளார்கள்.

தற்போது அவர்களுக்கு ஆளுக்கு 83,333 டொலர்கள் கிடைத்துள்ளது. இலங்கை பணத்தில் இது சுமார் 2 கோடியே 25 இலட்ச ரூபாய் ஆகும்.

இந்த மகிழ்ச்சியான செய்தியால் தாங்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள் அந்த குடும்ப உறுப்பினர்கள். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு