புத்தாண்டில் பதிலடி கொடுத்த உக்ரைன்!! -ரொக்கெட் தாக்குதல் ரஷிய வீரர்கள் 63 பேர் பலி-
உக்ரைன் மீது ரஷியா படைகள் தொடுத்துள்ள போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்ற போதும் அது பலனளிக்கவில்லை.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று உக்ரைன் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் 63 ரஷிய வீரர்கள் உயிரிழந்தனர். ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மகிவ்கா நகரில் ரஷிய வீரர்களின் தற்காலிக இராணுவ தளத்தில் உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிம்ரஸ் ரொக்கெட் லாஞ்சரில் இருந்து ரொக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. ஹிமர்ஸ் ரொக்கெட் லாஞ்சரில் இருந்து 6 ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 2 ரொக்கெட்டுகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் ரஷிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மகிவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 400 ரஷிய வீரர்கள் உயிரிழந்ததாகவும், 300 வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.