சுவிஸில் 250,000 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை

ஆசிரியர் - Editor II
சுவிஸில் 250,000 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை

சுவிட்சர்லாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் 250,000க்கும் அதிகமான பணியிடங்கள் வெற்றிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அந்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் 20 பணியிடங்களில் ஒன்று வெற்றிடமாக உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது.

குறிப்பாக அந்நாட்டில் செவிலியர்கள், எலக்ட்ரிசியன்கள், மேலாளர்கள் ஆகிய பணிகளுக்கு அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

2022 நவம்பர் 15 நிலவரப்படி, 6,995 செவிலியர்கள், 6,000 எலக்ட்ரிசியன்கள்மற்றும் 3,917 மென்பொருள் உருவாக்குவோருக்கான பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன.

மேலும் சூரிச் மாகாணத்தில் 59,318 பணியாளர்களும், Bern மாகாணத்தில் 42,280 பணியாளர்களும், Aargau மாகாணத்தில் 20,665 பணியாளர்களும், St. Gallen மாகாணத்தில் 17,370 பணியாளர்களும் Luzern மாகாணத்தில் 16,703 பணியாளர்களும் தேவைப்படுகிறார்கள். Vaud மாகாணத்தில் மொத்தம் 10,682 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு