18 இலட்சம் செலவு செய்து "ஓநாய்" போல உருமாறிய இளைஞர்

ஆசிரியர் - Editor II
18 இலட்சம் செலவு செய்து

ஜப்பானை சேர்ந்த ஒரு இளைஞர் விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் மீது அளவுகடந்த பாசம் இருந்த காரணத்தால் அவருக்கு வித்தியாசமான ஆசை வந்ததை அடுத்து அவர் ஓநாயாக உருமாற முடிவு செய்தார். 

இதற்கான முயற்சியிலும் அவர் இறங்கினார். அவர் ஆடை அலங்கார நிபுணரை அணுகி தன்னுடைய ஆசையை தெரிவித்தார். இதை கேட்ட அவரும் சரி என ஒப்புக்கொண்டார். ஆனால் ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க நிறைய செலவு ஆகும் என ஆடை வடிவமைப்பாளர் கூறினார். அதற்கும் அந்த இளைஞர் சம்மதம் தெரிவித்தார். 

இதையடுத்து அந்த வாலிபரை ஓநாயாக உருமாற்றுவதற்கான வேலைகள் தொடங்கியது. இதற்காக அவர் பல முறை உடையை அளவெடுப்பதற்காக நிறுவனத்துக்கு சென்று வந்தார். 

சுமார் 50 நாட்களில் அந்த வாலிபர் அச்சு அசல் ஓநாய் போல உருமாறினார். பின்னங்கால்களால் ஓநாய் நடப்பதுபோல சிறிது தூரம் நடந்தார். இதை பார்த்து அனைவரும் அசந்துபோனார்கள். திடீரென யாரும் பார்த்தால் அது ஒநாய் தான் என்று சொல்லும் அளவுக்கு அவரது கெட்-அப் கச்சிதமாக இருந்தது. 

இதற்காக அந்த இளைஞர் இந்திய மதிப்பில் 18 இலட்சம் ரூபாய் செலவு செய்து இருந்தார். அது அவருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. தனது கனவு நனவாகி விட்டதாக மகிழ்ச்சி அடைந்தார். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு