இரு ஆலயங்கள் மற்றும் ஒரு தொழிற்சாலைக்குள் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசை!

இரு ஆலயங்கள் மற்றும் ஒரு தொழிற்சாலை ஆகியவற்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் வவுனியா - கந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கந்தபுரம் முருகன் கோவில், பிள்ளையார் கோவில் ஆகியவற்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்,
உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்ததுடன், அப்பகுதியில் உள்ள சீமெந்து கல் அரியும் தொழிற்சாலைக்குள் நுழைந்து இலத்திரனியல் பொருட்களையும்
கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகம் மற்றும் தொழிற்சாலையினரால் முறையிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.