SuperTopAds

உக்ரைன் இன்னும் வீழவில்லை; வீழப்போவதும் இல்லை!! -அமெரிக்காவில் சூளுரைத்த ஜெலன்ஸ்கி-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் இன்னும் வீழவில்லை; வீழப்போவதும் இல்லை!! -அமெரிக்காவில் சூளுரைத்த ஜெலன்ஸ்கி-

பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள உக்ரைன் வீழவில்லை. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவில் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நிகழ்த்தி 300 நாட்கள் ஆகிவிட்டது. ரஷ்ய படையெடுப்புக்கு பின் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. 300 நாட்கள் கடந்த நிலையில் முதல்முறையாக அமெரிக்கா சென்றுள்ளார்.

வெள்ளை மாளிகையை அடைந்ததும் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் தனது மனைவியுடன் வெள்ளை மாளிகைக்கு வெளியே சென்று ஜெலென்ஸ்கிக்கு வரவேற்பு கொடுத்தார். பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் காங்கிரசில்  உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, 'நீங்கள் கொடுக்கும் நிதியுதவி வெறும் தானம் என்று நினைக்காதீர்கள் இது முதலீடு. இது ஜனநாயகம், பாதுகாப்புக்கான முதலீடு. இந்த அவையில் நான் உரையாற்றுவது பெருமைக்குரியது. எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. 

உக்ரைன் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. பதிலடி கொடுக்கிறது. பைடன் எங்களுக்கு துணை நிற்பதில் மகிழ்ச்சி. உக்ரைன் ஒருபோது ரஷ்யாவிடம் சரணடையாது என்றார்.