வடமாகாணசபையின் கவனயீனமே வடகிழக்கு மீள்குடியேற்ற செயலணி உருவாக காரணம், உறுப்பினா்கள் குற்றச்சாட்டு..
வடமாகாணசபையின் கவனயீனத்தாலேயே சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற் றுவதற்கான செயலணி உருவாக்கப்பட்டதாக வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் மீது குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்றார்கள்.
இன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 124வது அமர்வில் மேற்படி செயலணி தொடர்பாக ஆராயப்படும்போதே ஆழுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்து ள்ளார்கள். இதன்போது மேலும் கூறுகையில்,
இது குறித்து மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் கூறுகையில். மேற்படி செயலணியின் 1ம், 2ம், 3ம் கூட்டங்களுக்கு வடமாகாணசபைக்கு அழைப்பு கிடைக்கவில்லை. 4ம் கூட்டத்திற்கு அழைப்பு கிடைத்த நிலையில் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்
முதலமைச்சர் சார்பில் கலந்து கொண்டிருக்கின்றார். அதன் பின்னர் செயலணியின் கூட்டத்திற்கு அழைப்பு கிடைக்கவில்லையா? கிடைத்திருந்தால் ஏன் செல்லவில்லை? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து மாகாணசபை உறுப்பின்னர் அயூப் அஸ்மின் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிப தியினால் வடக்கின் மீள்குடியேற்றத் திற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான கூட்டம் கூட்டப்பட்டது.
இதற்கமைய மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் வடமாகாணத்தில் உள்ள மாவட்ட செயலகங்களில் கூட்டங்களை நடாத்தி ஒரு மீள்குடியேற்ற பொறிமுறையை தயாரித்திருந்தார். அந்த செய லணி உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம்
அமைச்சர் றிஷாட் பதியூதீனுக்கு முகம் அவ்வளவு சரியில்லை. இதற்கிடையில் உறுப்பினர் ப.சத்தியலிங்கம் உருவாக்கிய மீள்குடியேற்ற பொறிறை தொடர்பில் வடமாகாணசபை கவனம் செலுதவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய அமைச்சர் றிஷாட் சிங்கள,
முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான செயலணி ஒன்றை உருவாக்கினார் என கூறினார். தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் கருத்து தெரிவிக்கையில். மாகாணசபை உறுப்பினர் சத்திய லிங்கத்தின் மீள்குடியேற்ற பொறிமுறையினை ஜனாதிபதியே
ஏற்றுக் கொண்டார் என கூறினார்.