இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்!! -உதயநிதி ஸ்டாலின் அதிரடி-

ஆசிரியர் - Editor II
இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்!! -உதயநிதி ஸ்டாலின் அதிரடி-

தமிழக அமைச்சராக இன்று பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் தான் இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுகிறேன். 'மாமன்னன்' திரைப்படம் தான் எனது கடைசி திரைப்படம் என்றார். 

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்னன்' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு