குழந்தை பெற்றால் 3 இலட்சம்!! -பிறப்பு வீகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு புதிய திட்டம்-
தமது நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு மேலதிகமாக 48,000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் அண்மைக்காலமாக குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியினருக்கு பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு தொகை மானியமாக 2 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது.
பொருளாதார பற்றாக்குறை, உறுதித் தன்மையற்ற வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றால் குழந்தை பெற்றுக் கொள்வதில் அந்நாட்டு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில், கூடுதலாக 48,000 ரூபாய் சேர்த்து 3 இலட்சமாக வழங்க ஜப்பான் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.