இந்திய – சீன படையினருக்கு இடையில் எல்லையில் வெடித்தது மோதல்!! -சீன தரப்பிற்கு அதிக பாதிப்பு-

ஆசிரியர் - Editor II
இந்திய – சீன படையினருக்கு இடையில் எல்லையில் வெடித்தது மோதல்!! -சீன தரப்பிற்கு அதிக பாதிப்பு-

இந்திய – சீன நாடுகளில் எல்லைப் பகுதியில் நிலைகொண்டிருந்த இரு நாடுகளின் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக இந்தியா இராணுவம் தெரிவித்துள்ளது. 

அருணாச்சலப் பிரதேசத்தின் டாவாங் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இம்மோதல் இடம்பெற்றதாக இந்திய இராணுவம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

இம்மோதலில் இரு நாடுகளின் படையினருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக இந்திய இராணுவம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது. சுமார் 20 இந்திய படையினர் காயமடைந்ததாகவும் அதிக எண்ணிக்கையான சீன படையினருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவத்தின் பின்னர், அமைதியை உறுதிப்படுத்துவதற்காக இரு நாடுகளின் இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய, சீன படையிருக்கு இடையில் சுமார் ஒன்றரை வருடத்தின் பின் ஏற்பட்ட முதல் மோதல் இதுவாகும். 2020 ஆம் ஆண்டு  லடாக் பிராந்தியத்தில் இரு நாடுகளின் படையிருக்கும் ஏற்பட்ட மோதலில் குறைந்தபட்சம் 24 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு