SuperTopAds

பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் கொடிய வைரஸ்!! -ஸ்தம்பிக்கும் நிலையில் வைத்தியசாலை அவசரப்பிரிவுகள்-

ஆசிரியர் - Editor II
பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் கொடிய வைரஸ்!! -ஸ்தம்பிக்கும் நிலையில் வைத்தியசாலை அவசரப்பிரிவுகள்-

பிரித்தானியாவில் வாழும் சிறுவர்கள் மத்தியில் மிக தீவிரமாக பரவும் பக்டீரியா ளுவசநி யு தொற்று குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டின் சிறுவர் பாடசாலைகளில் குறித்த பாக்டீரியா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதுடன், இதுவரை இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 16 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது திடீரென்று குறித்த வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் வைத்தியசாலைகளில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பெரும்பாலான வைத்தியசாலைகளில் அவசரப்பிரிவுகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, வைத்தியசாலைகளில் அதிகளவு மக்கள் குவிந்துள்ளமையினால் கடும் இடப்பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே, மக்கள் குழந்தைகளுடன் நேரடியாக வைத்தியசாலைக்கு வருதை தர முன்னர்  111  என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உரிய சிகிச்சைகள் தொடர்பில் அறிவித்தல்களை பெற்று அதன் படி செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.