கிளிநொச்சி மாவட்டத்தில் சீமென்ற்-கிரவல் கலவையில் புதிய வீட்டு திட்டம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்டத்தில் சீமென்ற்-கிரவல் கலவையில் புதிய வீட்டு திட்டம்..

கிளிநொச்சி மாவட்டத்தில் கிரவல் மற்றும் சீமென்ற் கலவையினால் முதல் தடவையா க கட்டப்படும் வீட்டினை தமிழ்தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீ தரன் நேரில் பார்வையிட்டுள்ளார்.

கிளிநொச்சி- கல்லாறு கிராமத்தில் மேற்ப டி வீட்டு திட்டம் கட்டப்பட்டு வருகிறது. இத னை நேற்றய தினம் நாடாளுமன்ற உறுப் பினர் சி.சிறீதரன் நேரில் பார்வையிட்டுள் ளார்.

மாவட்டத்தில் முதல் தடவை யாக மேற்படி கலவையிலான வீட்டு திட்டம் கட்டப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வீடு கட்டப்படும் கல்லை நீரில் கரைத்து ஆ ராய்ந்தார்.

அப்போது அந்த கல் நீரில் கரைந்துள்ளது இதனையடுத்து மேற்படி வீட்டி திட்டம் மக் களுக்கு பொருத்தமானதா? என கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மக்க ளுக்கு அவசரமாக வீடு தேவை.

ஆனால் அந்த வீடுகள் நீண்டகாலம் பயன் படுத்தக்கூடியவையாக இருக்கவேண்டும்.  என கூறியதுடன் குறித்த வீட்டிக்கு சீமன்ற் பூச்சையாவது பூசவேண்டும் என கூறியுள் ளார்.

மேற்படி வீட்டு திட்டம் யூ.என்.கபிற்றாட் நி றுவனத்தினால் 6லட்சத்து 70ஆயிரம் ரூ பாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு