வடமராட்சி கிழக்கில் தென்பகுதி மீனவா்கள் அட்டை பிடிக்க 5 கடற்றொழிலாளா் சங்கங்கள் அனுமதி வழங்கியுள்ளன..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி கிழக்கில் தென்பகுதி மீனவா்கள் அட்டை பிடிக்க 5 கடற்றொழிலாளா் சங்கங்கள் அனுமதி வழங்கியுள்ளன..

வடமராட்சி கிழக்கில் வாடிகளை அமைத்து கடலட்டை பிடிப்பதற்கு 5 கடற்றொழிலாளர் கூ ட்டுறவு சங்கங்களும், பல தனிநபர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். என யாழ்.மாவட்ட க ற்றொழில் திணைக்கள பிரதி பணிப்பாளர் ஜே.சுதாகரன் கூறியிருக்கின்றார். 

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை உடன் வெளியேற்றக் கோரி வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் யாழ்.மாவட் ட கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆகியன இணைந்து இன்று போராட்டம் ஒன்றை

நடாத்தியிருந்தது. இதன்போதே கடற்றொழில் திணைக்கள பிரதி பணிப்பாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வெளிமாவட்டங்களை சேர்ந்த மீன வர்கள் கடலட்டை பிடிப்பதற்கு யாழ்.மாவட்டத்தில் உள்ள 5 கடற்றொழிலாளர் கூட்டுறவு 

சங்கங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன. அதேபோல் பல தனிநபர்கள் ஒப்புதல் வழங்கியதன் அடிப்படையிலேயே வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். 

சட்டத்தின் பிரகாரம் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை மத்திய கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளர் வழங்குகிறார். அந்த அனுமதியை கொண்டு கடலட்டை பிடிக்கலாம். ஆனால் வாடிகi ள அமைப்பதற்கு அந்த பிரதேசத்தின் பிரதேச செயலருடைய ஒப்புதல் பெறப்பட்டிருக்கவேண்

டும். அவ்வாறான ஒப்புதல் பெறப்படாதவிடத்து அதனை பார்க்கவேண்டியது பிரதேச செயலரே ஒழிய நாங்கள் அல்ல. யாழ்.மாவட்டத்தில் 14 நிறுவனங்கள் கடலட்டை பிடித்துக் கொ ண்டிருக்கின்றன. 

இவர்களால் எமது பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாம் காலத்திற்கு காலம் மத்திய கடற்றொழில் அமைச்சுக்கு எழுத்துமூலம் கடிதங்களை எழுதியிருப்பதுடன், எமது மீனவர்கள் தென்பகுதி மீனவர்களுக்கு எதிராக நடாத்தும் போராட்டங்கள் 

மற்றும் எதிர்ப்புக்கள் குறித்தும் நாங்கள் மத்திய கடற்றொழில் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறோம். இதனை விட இதுவரை யாழ்.மாவட்டத்தில் 17 படகுகளையும், 49 மீனவர்களையும் நாங்கள் கைது செய்து அவர்களுக்கு நீதிமன்றம் ஊடாக 3லட்சத்து 10 

ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளோம். இவ்வாறு எங்களால் முடிந்த சகல விடயங்க ளையும் நாங்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றோம். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பல அரசியல்வாதிகள், 

மீனவர்கள் இணைந்து யாழ்.மாவட்ட கட ற்றொழிலாளர் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். இதன்போது தென்பகுதி மீனவர்கள் சட்டத்திற்கு மாறாக கடலட்டை பிடித்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

என எம்மிடம் கேட்கப்பட்டது. அதற்கமைய சட்டத்திற்கு மாறாக கடற்றொழில் செய்யும் மீனவர்களை கைது செய்வதற்கு கடற்படையின் உதவியை பெற்றுள்ளளோம். மேலும் வடம ராட்சி கிழக்கில் கடந்த 3 நாட்களில் எவரும் சட்டத்திற்கு மாறாக 

கடலட்டை பிடிக்கவில்லை என்றார். 

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு