தென்பகுதி மீனவா்களை வெளியேற்ற ஒரு தீக்குச்சி போதும், வடமராட்சி கிழக்கு மீனவா்கள் எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
தென்பகுதி மீனவா்களை வெளியேற்ற ஒரு தீக்குச்சி போதும், வடமராட்சி கிழக்கு மீனவா்கள் எச்சாிக்கை..

வடமராட்சி கிழக்கிலிருந்து புதன் கிழமைக்குள் தென்பகுதி மீனவர்கள் வெளியேற்றப்படாவிட்டால் வடமராட்சி மீனவர்கள் சட்டத்தை கையில் எடுப்பார்கள், தென்பகுதி மீனவர்களை வெளி யேற்ற ஒரு தீக்குச்சி போதும் என வடமராட்சி கிழக்கு, வடக்கு மீனவர்கள் கூறியுள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை உடன் வெளியேற்றக் கோரி வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் யாழ்.மாவட் ட கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆகியன இணைந்து இன்று போராட்டம் ஒன்றை

நடாத்தியிருந்தது. இதன்போNது மீனவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில், தென்பகுதி  மீனவர்களை உடனடியாக வடமராட்சி கிழக் கிலிருந்து வெளியேற்றுமாறு நாங்கள் தொடர்ச்சியாக கேட்டுவருகிறோம். 

ஆனாலும் ஆக்கபூர்வமாக ஒரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இதனால் தினசரி எமது கடற்றொழிலில் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் நாம் வாழ்வாதார நெருக்கடிக ளையும் எதிர்கொண்டு வருகின்றோம். 

மறுபக்கம் மிகப்பெரும் வளம் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை எமது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதிகாரம் உள்ள அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காத நிலையில் 

மக்கள் நாங்கள் வீதியில் இறங்கி உரிமைகளுக்காக போரடவேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியிருந்து தொழில் செய்துவரும் தென்பகுதி மீனவர்களை புதன் கிழமைக்குள் அங்கிருந்து வெளியேற்றவேண்டும். 

இல்லையேல் மக்கள் நாங்கள் சட்டத்தை கையில் எடுப்போம். தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற ஒரு தீக்குச்சி எமக்கு போதுமானது. அவ்வாறான இனமோதல் ஒன்று வெடிப்ப தற்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இடமளிக்ககூடாது. 

அவ்வாறு இடம்பெற்றால் அதற்கு பூரணமான பொறுப்பாளிகள் அரசியல்வாதிகளும், அதிகாரி களும் மட்டுமேயாகும் என்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு