பிடியெடுப்பின் போது நடந்த விபரீதம்!! -4 பற்களை இழந்த சாமிக-

ஆசிரியர் - Editor II
பிடியெடுப்பின் போது நடந்த விபரீதம்!! -4 பற்களை இழந்த சாமிக-

நேற்று புதன்கிழமை நடந்த எல்.பி.எல் போட்டியின் போது நடந்த சம்பவம் ஒன்றின் காரணமாக இலங்கையின் சகலதுறை வீரர் சாமிக கருணாரட்ண தனது நான்கு பற்களை இழந்துள்ளார்.

கண்டி பல்கோனிற்கும் - கோல் கிளேடியேட்டர்சிற்கும் இடையிலான போட்டியின் போது சாமிக தனது நான்கு பற்களை இழக்கும் நிலையேற்பட்டது. நேற்யை போட்டியின் போது  அவர் பந்தை பிடிக்க முயன்றவேளை பந்து அவரது முகத்தை தாக்கியது.

இதனை தொடர்ந்து சாமிக உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுசத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். சாமிகவிற்கு வேறு பாதிப்புகள் இல்லை தேவைப்படும் தருணத்தில் அவர் அணியை பிரதிநிதித்துவம் செய்வார் என அணி முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு