எல்.பி.எல் ரி-20 தொடர்!! -அடுத்தடுத்த வெற்றிகளுடன் முன்னேறும் கண்டி பல்கொன்ஸ் அணி-

ஆசிரியர் - Editor II
எல்.பி.எல் ரி-20 தொடர்!! -அடுத்தடுத்த வெற்றிகளுடன் முன்னேறும் கண்டி பல்கொன்ஸ் அணி-

கண்டி பல்கொன்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகள் இடையில் நடைபெற்ற எல்.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டியில் கண்டி பல்கொன்ஸ் அணி 5 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. 

ஹம்பாந்தோட்டையில் நேற்று புதன்கிழமை ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

இதன்படி ஆரம்பம் முதலே சற்றுத் தடுமாறத் தொடங்கிய அவரின் அணி முதலில் துடுப்பாட்டத்தின் போது 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்கள் பெற்றது.

இதேவேளை கண்டி பல்கொன்ஸ் அணி பந்துவீச்சில் கார்லோஸ் பிராத்வைட் வெறும் 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஸஹூர் கான் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 122 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கண்டி பல்கொன்ஸ் அணி குறித்த வெற்றி இலக்கை 15 பந்துப்பரிமாற்றங்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களுடன் அடைந்தது.

கண்டி பல்கொன்ஸ் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த கமிந்து மெண்டிஸ் 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுத்தார். போட்டியின் ஆட்டநாயகனாக கண்டி பல்கொன்ஸ் அணி வீரர் கார்லோஸ் பிராத்வைட் தெரிவாகியிருந்தார்.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு