கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 தமிழ் திரைப்படங்கள்!!

ஆசிரியர் - Editor II
கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 தமிழ் திரைப்படங்கள்!!

இவ்வாண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 தமிழ் திரைப்படங்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், விக்ரம் திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது. 

பொன்னியின் செல்வன் இரண்டாம் இடத்தையும் தளபதியின் பீஸ்ட் திரைப்படம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. ராக்கெட்ரி 4 ஆம் இடத்தையும் லவ் டுடே 5 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. 

பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய வலிமை 6 ஆம் இடத்திலும் திருச்சிற்றம்பலம் 7 ஆம் இடத்திலும் உள்ளன. மகான்(8), கோப்ரா(9) மற்றும் விருமன்(10) ஆகிய இடங்களைப் பெற்றுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு