SuperTopAds

விசாரணை குழுவின் அறிக்கை பழிவாங்கும் நோக்கம் கொண்டது! மீண்டும் சுகாதார பணிப்பாளராக சரவணபவன் நியமனம்..

ஆசிரியர் - Editor I
விசாரணை குழுவின் அறிக்கை பழிவாங்கும் நோக்கம் கொண்டது! மீண்டும் சுகாதார பணிப்பாளராக சரவணபவன் நியமனம்..

கிளிநொச்சி மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ந.சரவணபவன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கொவிட் இடைத் தங்கல் நிலையத்தில் இடம்பெற்ற முறைகேடுகளுடன் தொடர்புபட்டார் என முன்னாள் ஆளுநர் சாள்சினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு கூறியிருந்தது. 

ஆனால் குறித்த விசாரணை அறிக்கை வைத்தியரை திட்டமிட்டு பழிவாங்கும் வகையில் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ்சின் கணவரான மன்மதராசாவினால் 

அப்போதைய பிரதமர் செயலாளராக இருந்த பத்திநாதனுக்கு தொிந்து திரிவுபடுத்தப்பட்டதாக தற்போதைய ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு, 

மேற்படி விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்தவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் குறித்த விசாரணை அறிக்கை தொடர்பில் வடமாகாண பிரதமர் செயலாளர் அலுவலகத்தை ஆராயுமாறு 

ஆளுநர் ஜீவன்தியாகராஜ பணிப்புரை விடுத்ததற்கு அமைய அதில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் வடமாகாண பிரதம செயலகத்தால் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் வடமாகாண ஆளுநர் பிரதமர் செயலாளர் அலுவலகம் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் , சுற்றறிக்கைகளை பின்பற்றாமைபோன்ற முரண்பாடான விடயங்களை மேற்கோள்காட்டி 

விசாரணை குழு அறிக்கையை இரத்துச் செய்வதாக மத்திய சுகாதார அமைச்சுக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா எழுத்து மூலம் கடிதம் அனுப்பியதாக ஆளுநர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் குறித்த விவகாரம் ஓர் அரசியல் கட்சி ஒன்றின் பின்னணியில் திட்டம் தீட்டப்பட்டதாக கடத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 

அமைச்சரும் சுகாதார அமைச்சருடன் குறித்த விடயம் தொடர்பில் காரசாரமாக விவாதித்ததாக அறிய வருகிறது. 

தமிழ்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் குறித்த வைத்தியர் திட்டமிட்ட முறையில் பழிவாங்கப்பட்டுள்ளதாக 

பாராளுமன்றத்தில் காரசாரமாக பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் மீண்டும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சரவணபவன் நியமிக்கப்பட்டுள்ளார்.