சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையம் யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் திறப்பு..

ஆசிரியர் - Editor I
சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையம் யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் திறப்பு..

உலக சுகாதார நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் யாழ்.பழைய பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுப்புற காற்று தரக் கண்காணிப்பு நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜெயசிங்க, மற்றும் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் வைபவ ரீதியாக திறந்துவைத்துள்ளனர். 

இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியுடனும், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைமையில்  யாழ்.மாநகர சபையினால் இந்த சுற்றுப்புற காற்று தரக் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹ, (Dr.Ani jasinghe) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே (Mr.Supun s Pathirage), மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் பி.ஹேமந்த ஜெயசிங்கே ( Mr.P.B.Henmntha Jayasinghe), 

உலக சுகாதார நிறுவனத்தினைச் சேர்ந்த கலாநிதி வேர்கிங் மல்லவராச்சி (Mr.Verging Mallawarachchi), யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம,பிரதீபன், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி,

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ்.மாநகர ஆணையாளர் இ.த. ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு