SuperTopAds

வடமாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் விசேட சோதனை நடவடிக்கை! மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் விசேட சோதனை நடவடிக்கை! மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய..

பொலிஸ்மா அதிபரின் பணிப்பிற்கமைய வடமாகாண ஆளுநரின் ஒத்துழைப்புடன் வடமாகாணம் முழுவதும் உள்ள பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

பாடசாலைகளில் விழிப்புணர்வு செயற்பாடு மற்றும் தனியார் வகுப்புகள் மற்றும் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன போதைப் பொருளை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

குறிப்பாக பொலிசாரால் மாத்திரம் போதை பொருளை கட்டுப்படுத்த முடியாது மக்கள்  பூரண ஒத்துழைப்புனை வழங்க வேண்டும். அதாவது உங்களுடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் வைத்தியராக, பொறியியலாளராக வரவுள்ளவர்கள். 

அவ்வாறான ஒரு சமுதாயத்தினை இந்த போதைப் பொருளுக்கு அடிமையாக விடுவது பெரும் குற்றமாகும். எனவே பொலிசார் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் ஒழிப்பிற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றார்கள். 

வடமாகாணத்தில் உள்ள 61 பொலிஸ் நிலையங்களிலும் ஒவ்வொரு நாளும் போதைப் பொருளோடு தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன 

அதேபோல சிவில் சமூககுழுக்களின் மூலம் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது. அந்த ஒத்துழைப்பு மேலும் பல்மடங்கு தேவையாக உள்ளது. வடமாகாணத்தில் பொலிசார் போதை ஒழிப்பிற்கு மாத்திரமல்லாது போக்குவரத்து விதிமுறைகள் 

மற்றும் சட்ட ஒழுங்கு நிலைநாட்டல் போன்ற பல்வேறுபட்ட செயற்திட்டங்களில் பொலிசார் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.