செயற்கை குருதிச் சுற்றோட்டத் தொகுதி கருவியை கண்டுபிடித்த யாழ்ப்பாண இளைஞன்!

ஆசிரியர் - Editor I
செயற்கை குருதிச் சுற்றோட்டத் தொகுதி கருவியை கண்டுபிடித்த யாழ்ப்பாண இளைஞன்!

செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதி கருவியொன்றை தானே புதிதாக கண்டுபிடித்தாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரான கோகுலன் தெரிவித்தார். 

இதயம் செயலிழந்தாலோ மாரடைப்பு ஏற்பட்டாலோ உடனடியாக மூன்று நிமிடங்களுக்குள் குறித்த செயற்கை குருதிச்சுற்றோட்டத் தொகுதி கருவியை உடலில் இணைத்தால் 

உயிரிழப்பில் இருந்து தவிர்க்க முடியும் என்றார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

இது முக்கியமான மருத்துவ கண்டுபிடிப்பாக இருக்கும். நுரையீரல் செயலிழந்தவர்களும் இதனை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். 

இதயமும் நுரையீரலும் செயலிழந்தவர்கள் இந்த கருவியைப் பயன்படுத்தக்கூடிய வகையில் இதயமும் நுரையீரலும் இணைந்த செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதியாக 

இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவிக்கு 2009 இதயம் என பெயரிடப்பட்டுள்ளது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு