கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து கோர விபத்தில் சிக்கியது! 23 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து கோர விபத்தில் சிக்கியது! 23 பேர் படுகாயம்..

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் கோர விபத்தில் சிக்கிய நிலையில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. வீதியில் இருந்த மாடுகளுடன் குறித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் எவருக்கும் பாரிய பாதிப்பு இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு