விசேட தேவையுடைய ஆட்டோ சாரதியை வாடகைக்கு பிடித்த இருவர் கட்டணம் செலுத்தாமல் தப்பிய ஓடிய நிலையில் மாட்டினர்!

ஆசிரியர் - Editor I
விசேட தேவையுடைய ஆட்டோ சாரதியை வாடகைக்கு பிடித்த இருவர் கட்டணம் செலுத்தாமல் தப்பிய ஓடிய நிலையில் மாட்டினர்!

விசேட தேவையுடைய ஆட்டோ சாரதியை வாடகைக்கு பிடித்துக் கொண்டு பயணித்த இருவர் வாடகை கட்டணம் 2500 ரூபாய் பணத்தை கொடுக்காமல் தப்பி ஓட முயற்சித்த இருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்திருக்கின்றனர். 

கொட்டாவ நகரிலிருந்து தலவத்துகொட செல்வதற்காக இந்த ஆட்டோவில் ஏறிய இந்தச் சந்தேக நபர்கள் தலவத்துகொட சென்று பத்தரமுல்லைக்கு வந்து மீண்டும் கொட்டாவை சென்று தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வங்கியொன்றுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதன்போது முச்சக்கர வண்டி சாரதி சந்தேக நபர்களிடம் முச்சக்கரவண்டிக் கட்டணத்தைக் கோரியபோது, அவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டதுடன், முச்சக்கரவண்டி சாரதி அவர்களுடன் சண்டையிட முற்பட்டபோது, 

சந்தேக நபர்கள் இருவரும் சாரதியை கீழே தள்ளித் தாக்கியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு