வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாத சிசு உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாத சிசு உயிரிழப்பு..

வவுனியா - ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்தில் இரண்டு மாத குழந்தை பலியாகியுள்ளது. முல்லைத்தீவில் வசிக்கும் ச.சிந்துஜன் தனது மனைவி மற்றும் இரண்டு மாத குழந்தையுடன் வவுனியாவில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு கடந்த 7ஆம் திகதி சென்றுள்ளனர்.

நிகழ்வொன்றுக்காக வருகை தந்திருந்த நிலையில் தங்கையின் தற்காலிக வீட்டில் தங்கியிருந்த போது மாலை சுமார் 5 மணியளவில் வீட்டில் உட்பகுயில் உள்ள கற்சுவர் குழந்தையின் மீது வீழ்ந்துள்ளது.உடனடியாக வீட்டார் குழந்தையை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் குழந்தை உயிரிழந்துள்ளது.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு