இந்தியாவிலிருந்து படகுமூலம் இலங்கை வந்த 5 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
இந்தியாவிலிருந்து படகுமூலம் இலங்கை வந்த 5 பேர் கைது!

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கையைச் சேர்ந்த ஐவரும் நேற்று திங்கட்கிழமை காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வந்திறங்கிய வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் எனத் தெரிய வந்துள்ளது.குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 5 சந்தேக நபர்கள் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு