யாழ்.புத்தூர் சந்தியில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது சரமாரி வாள்வெட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.புத்தூர் சந்தியில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது சரமாரி வாள்வெட்டு!

யாழ்.புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று இரவு மின்வெட்டு அமுலில் இருந்த நிலையில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு கும்பல் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து வாள்வெட்டு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த 35 வயதான வர்த்தக நிலைய உரிமையாளர் அச்சுவேலி வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார். 

இதேவேளை யாழ்.மாவட்டத்தில் அண்மைய நாட்களில் பல வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறும் மக்கள் பொறுப்புவாய்ந்தவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு