யாழ்.கோப்பாயில் சட்ட வைத்திய அதிகாரியின் காரினை வழிமறித்ததுடன், அவரை தாக்க முயற்சித்த சண்டியர்கள் 10 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாயில் சட்ட வைத்திய அதிகாரியின் காரினை வழிமறித்ததுடன், அவரை தாக்க முயற்சித்த சண்டியர்கள் 10 பேர் கைது!

வீதியை மறித்து நின்று கேக் வெட்டியதுடன், சட்ட வைத்திய அதிகாரியை வழிமறித்து தாக்க முயற்சித்த சண்டியர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

நேற்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

மானிப்பாய் பொலிசார் தமது பிரிவுட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தியவரை பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் 

கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தி கோப்பாயில் இருந்து சட்ட வைத்திய அதிகாரி தனது காரில் 

கோப்பாய் வைத்தியசாலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது கோப்பாய் நாவலர் பாடசாலை முன் உள்ள வீதியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீதியினை மறித்து 

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்ததோடு சட்ட அதிகாரியின் வாகனம் பயணிப்பதற்கு இடமளிக்காது கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் 

சட்ட வைத்திய அதிகாரியை தாக்கவும் முயற்சித்துள்ளனர். வைத்தியஅ திகாரி உடனடியாக கோப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து 

கோப்பாய் பொலிசார் விரைந்து சட்ட வைத்திய அதிகாரியை பாதுகாப்பாக மீட்டதோடு கடமைக்கு இடையூறு விளைவித்த 10 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். 

மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளார்கள் கைது செய்யப்பட்டவர்கள் அரசடி கோப்பாய் திருநெல்வேலி பகுதி சேர்ந்த இளைஞர்கள் எனவும் 

மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் கோப்பாய்பொலிசார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு