யாழ்.பலாலி வீதியில் மூடப்பட்ட மருந்தகம் மீள திறப்பு! வடக்கு சுகாதாரத்துறையின் குத்துவெட்டு அம்பலமானதாக தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பலாலி வீதியில் மூடப்பட்ட மருந்தகம் மீள திறப்பு! வடக்கு சுகாதாரத்துறையின் குத்துவெட்டு அம்பலமானதாக தகவல்..

யாழ்.பலாலி வீதியில் புதிதாக திறக்கப்பட்ட மருந்தகம் ஒன்று திடீரென மூடப்பட்ட நிலையில் அதே மருந்தகம் மீளவும் கோலாகலமாக திறக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பாக பல உள்வீட்டு தகவல்கள் கசிந்திருக்கின்றன. 

குறித்த மருந்தகம் சுகாதார துறை அதிகாரிகளால் மருந்தகங்களுக்குரிய நியமங்களை கொண்டிருக்கவில்லை. என குற்றஞ்சாட்டப்பட்டு மூடப்பட்டது. எனினும் அந்த மருந்தகம் உரிய நியமங்களை பூர்த்தி செய்திருந்தபோதும், 

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் பிறிதொரு மருந்தகம் மீது வைத்திருந்த அளவுக்கதிகமான பற்றினால் குறித்த மருந்தகத்தை மூடுமாறு பணித்ததாக கூறப்படுகின்றது. 

(NMRA)தேசிய மருந்தக ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மட்டுமே ஒரு மருந்தகத்தை திறப்பதற்கும், மூடுவதற்குமான கட்டளைகளை பிறப்பிக்கும் ஒரு நிறுவனமாக சுகாதார அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

குறித்த அதிகார சபையில் இருந்து இரு அதிகாரிகள் மேற்படி மருந்தகத்தின் அனுமதி தொடர்பான அளவீடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட நிலையில் இரு அதிகாரிகளும் வெவ்வேறான அளவீடுகளில் அறிக்கை சமர்ப்பித்ததாக அறியக் கிடைத்தது.

இவ்வாறு செயல்பட்ட அதிகாரிகள் ஒருவர் குறித்த மருந்தகம் திறக்கப்படகூடாது என்பதில் மிக திடமாக இருந்தமையும் அம்பலமாகியுள்ளது.  புதிதாக திறக்கப்பட்ட மருந்தகம் ஒன்றுக்கும் அதன் அருகில் உள்ள மருந்தகத்திற்கும் இடைப்பட்ட துாரத்தை குறைத்ததாக கூறப்படுகிறது. 

இவ்வாறான நிலையில் குறித்த மருந்தகத்தை மூடுமாறு பணித்த அதிகாரி தொடர்பில் சுகாதார அமைச்சுவரை தகவல்கள் சென்றுள்ள நிலையில் மருந்தகத்தை மூடுமாறு பணித்த வடமாகாண சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருவரை ஒருவர் விரல் சுட்டியுள்ளனர். 

மேலும் யாழ்.மாவட்டத்தில் பல மருந்தகங்கள் National Medicine Regulatory Authority (NMRA)தேசிய மருந்தக ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அனுமதி பெறப்படாமல் பல வருடங்களாக இயங்கி வருகின்ற விடையமும் பெயர் விவரங்களுடன் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் தடைகள் நீங்கி தற்போது மீண்டும் அதே மருந்தகம் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 2வது திறப்புவிழாவில் இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு