SuperTopAds

வைத்திய கலாநிதி ந.சரவணபவன் பழிவாங்கலுக்கு உள்ளானாரா? முன்னாள் ஆளுநரின் கணவர் விசாரணை அறிக்கையை மாற்றி எழுத சொன்னாரா? விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
வைத்திய கலாநிதி ந.சரவணபவன் பழிவாங்கலுக்கு உள்ளானாரா? முன்னாள் ஆளுநரின் கணவர் விசாரணை அறிக்கையை மாற்றி எழுத சொன்னாரா? விசாரணைகள் ஆரம்பம்..

கிளிநொச்சி மாவட்ட முன்னாள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சரவணபவன் கொரோனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகளை அடிப்படையாக கொண்டு பழிவாங்கல் இடம்பெற்றுள்ளதா என மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

கொரோனா இடர்காலப்பகுதியில் அமைக்கப்பட்ட தொற்று நோய் வைத்தியசாலையில் முறைகேடுகள் இடம்பெற்றமை தொடர்பில் அப்போதைய வடமாகாண ஆளுநர் பி.எச்.எம் சாள்ஸ் அம்மையாரின் பணிப்புரையின் பெயரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த விசாரணையின்போது அப்போதைய சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய சரவணபவனை திட்டமிட்ட முறையில் அப்போதைய ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ்சின் கணவரான மன்மத ராசாவினால் உத்தரவின்பேரில் 

அப்போதைய பிரதம செயலாளர் பத்திநாதனால் விசாரணை அறிக்கையை மன்மத ராசா கூறியபடி எழுதித் தருமாறு விசாரணைக்குழு நிர்பாந்திக்கப்பட்டதாக அந்த குழுவில் அங்கம் வாகித்த ஒருவர் தற்போதைய பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு அம்பலப்படுத்தியுள்ளாராம்.

குறித்த தொற்றுநோய் பிரிவுக்கு வழங்கப்பட்ட உணவு மோசடியில் கிளிநொச்சி சுகாதார பணிமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை ஆற்றிய ஒருவருக்கு தொடர்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

அவரைக் காப்பாற்றும் முகமாக முன்னாள் ஆளுநரின் கணவர் விசாரணைக் குழு அறிக்கையை திரிவுபடுத்தியதாக அறியக் கூறப்படுகிறது. மேலும் குறித்த நபரை பிரதேசசபையின் தற்காலிக செயலாளராக பதவி உயர்வும் அக்கால பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு உயர் மட்டங்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த கொரோனா சிகிச்சை நிலையத்தின் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட ஆரம்ப விசாரணை குழு தொடர்பிலும் 

முரணான விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறித்த விசாரணை குழு கொரோனா இடர்காலப் பகுதியில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவத்தனவினால வெளியிடப்பட்ட சில சுற்று நிருபங்களில் தெரிவிக்கப்பட்ட விடையதானங்களை அறியாது சில முடிவுகளை எடுத்தமையும் அம்பலத்துக்கு வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள நிலையில், மத்திய அரசுக்கு அனுப்பபட்டுள்ள விசாரணை அறிக்கை பாரபட்சமானதா? என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணை குழு அறிக்கையில் சந்தேகம் இருப்பது தொடர்பில் வடமாகாண பிரதமர் செயலாளர் அலுவலகம் ஆளுநர் அலுவலகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் கிளிநொச்சி பதில் பிராந்திய சுகாதார பணிப்பாளராக நியமிக்கப்பட்ட திலீபனுக்கு 

நிதி அதிகாரத்தை வழங்க தற்போதைய ஆளுநர் மறுத்ததாக பிரதம செயலாளர் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இது இவ்வாறிருக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறித்த விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பில் 

பல்வேறு குற்றச்சாட்டுகளை பாராளுமன்றத்தில் முன்வைத்த மையை குறிப்பிடத்தக்கது.