வடமராட்சி கிழக்கு, வடக்கு கடற்றொழிலாளர் சமாசங்கள், தென்பகுதி மீனவர்களிடம் லஞ்சம் பெற்றார்களா?

ஆசிரியர் - Editor I
வடமராட்சி கிழக்கு, வடக்கு கடற்றொழிலாளர் சமாசங்கள், தென்பகுதி மீனவர்களிடம் லஞ்சம் பெற்றார்களா?

வடமராட்சி கிழக்கு பகுதியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக் கோரி யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு நடாத்தப்பட்ட போராட்டத்தில் வடமராட்சி வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்  சம்மேளனம் ஆகியன கலந்து கொள்ளாமல் பின்வாங்கினர்.

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள 1500ற்கும் மேற்பட்ட தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி கடந்த புதன் கிழமை வடமராட்சி கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன் று நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு கடற்றொழிலா ளர் சமாசங்களும், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் ஆகியன ஒன்றிணைந்து 

யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தை 6ம் திகதி முற்று கையிட்டு போராட்டம் நடாத்துவதென தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும் நேற்று முன்தினம் மாலை போராட்டம் நடத்துவதற்கு மேற்படி இரு சமாசங்கள் மற்றும், சம்மேளனமும் போரா ட்டத்தில் கலந்து கொள்வதில்லை. என  தீர்;மானித்திருத்திருக்கின்றது. இதனையடுத்து நேற்று

நடைபெற்ற முற்றுகை போராட்டம் வடமராட்சி கிழக்கு மீனவர்களாலும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களால் ஒழுங்கமைக் கப்பட்டு நடத்தப்பட்டிருக்கின்றது. இதேவேளை வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆகியன அடாத்தாக தங்கியிருக்கும் 

தென்ன்பகுதி மீனவர்களிடம் லஞ்சம் பெற்றுவிட்டார்களா? என தமக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக நேற்றய தினம் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் சிலர் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு