சிறுமியின் வயிற்றில் இருந்த 3 கிலோ முடி!! -அதிர்ச்சி அடைந்த பெற்றோர்-
சீனாவில் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து மூன்று கிலோ தலைமுடியை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர்.
அந்நாட்டில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு சிறுமி ஒருவரை அவரது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் அழைத்து சென்றுள்ளனர். அவர் உணவு உண்ண முடியாமல் உள்ளார். மேலும் அவரது தலை வழுக்கையாய் உள்ளது. சிறுமியை வைத்தியசாலையில் சேர்த்து பரிசோதனை செய்த போது அச் சிறுமியின் வயிற்றுக்குள் ஏராளமான தலைமுடி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றுக்குள் இருந்து தலைமுடியை அகற்றியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3 கிலோ அளவிற்கு சிறுமியின் வயிற்றுக்குள் முடி இருந்துள்ளது.
எதனால் இப்படி நேர்ந்தது என்பது குறித்து ஆராய்ந்த போதுதான் பல திடுக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளது. அந்த சிறுமி தனது தலைமுடியை தானே பிடுங்கி சாப்பிட்டிருந்திருக்கிறார். இதனால் அவரது தலை வழுக்கை ஆகியுள்ளது. தனது தலைமுடியை தானே பிடுங்கி சாப்பிட்டதால் வயிற்றுக்குள் சென்ற தலைமுடி வயிற்றை அடைத்துக் கொண்டு இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.