SuperTopAds

சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சி திட்டத்திற்காக வரும் ஜனாதிபதி, அனந்த சுதாகரனை விடுதலை செய்து இரு சிறுவர்களின் ஏக்கத்தை போக்குவாரா?

ஆசிரியர் - Editor I
சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சி திட்டத்திற்காக வரும் ஜனாதிபதி, அனந்த சுதாகரனை விடுதலை செய்து இரு சிறுவர்களின் ஏக்கத்தை போக்குவாரா?

சிறுவர்களைப் பாதுகாப்போம் என்னும் தேசிய நிகழ்ச்சிக்காக கிளிநொச்சிக்கு வருகை தரும் ஜனாதிபதி அங்கே தந்தையின் வரவிற்காக காத்திருக்கும் இரு சிறுவர்களின் ஏக்கத்தைப் போக்குவதற்கு ஆனந்தசுதாகரனை விடுதலை செய்த பின்பே கிளிநொச்சிக்கு வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான விவாத்த.துல் பங்குகொண்டு உரையாற்றும்போதே மேற்படி கோரிக்கையினையும் முன்வைத்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

சிறுவர்களைப் பாதுகாப்போம் என்னும் தேசிய நிகழ்ச்சி ஒன்றிற்காக எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருகைத்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது சிறுவர்களைப் பாதுகாப்போம் என்று கூறுகின்ற ஜனாதிபதி அந்த மாவட்டத்தில் உள்ள சிறுவர்களைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும். அதற்காக அந்த மாவட்டத்திலே தந்தையின் வரவிற்காக காத்மிருக்கும் இரு சிறுவர்களை காக்க ஜனாதிபதி ஆனந்தசுதாகரனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இந்த நாட்டில் உள்ள அரசியல் கைதிகளை அரசியல் ரீதியில் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றோம். அதற்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி தனது ஆட்சிக் காலத்தில் ஓரேயொருவரை மட்டுமே இதுவரையில் அரசியல் ரீதியில் விடுதலை செய்தார் . ஏனையோர் நீதிமன்றம் ஊடாகவே விடுஒஇக்கப்பட்டனர். எனவே அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

இதேபோன்று பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடற்படையினர் மன்னாரில் புதிதாக முகாம் அமைப்பது தொடர்பில் கடற்படைத் தளபதியை சந்திக்க அனுமதி கோரினால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் சந்திக்குமாறு கூறுகின்றார். அதன் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சிற்கு விண்ணப்பித்தால் அதற்கு பதிலே கிடையாது. 

அதுவரை அங்கே மீனவர்கள் தொழில்புரிய முடியாது தவிக்கின்றனர். இதனை எங்கு போய் கேப்பது. இதேநேரம் வடக்கிலே பாரிய உல்லாச விடுதிகள் பல வற்றினை இராணுவமே நடத்துகின்றது. அதேபோன்று வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள பணையினர் தொழில் முயற்சியிலேயே ஈடுபடுகின்றனர். என்றார்.

இதன்போது  குறுக்கிட்ட ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் நந்தனஹேரத் ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் தனது மாவட்டம் தொடர்பில் கேள்விகளை அடுக்குகின்றார் ஆனால் அது தொடர்பில் பதிலளிக்க யாருமே இல்லை . எனவே அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றார்.

இந்த நேரம் சபைக்குத் தலமை தாங்கிய பிரதி சபாநாயகர் இவற்றிற்கு பதிலளிக்குமாறு கோரினார் .்இதன்போது பதிலளித்த சபை முதல்வர் நிமால்சிறிபாலடி சில்வா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைத்தால் மாவட்ட படைத் தளபதிகள் சந்தித்தே ஆக வேண்டும். என்றார்.