தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு மனிதாபிமான வேலைத்திட்டம் முன்னெடுப்பு

ஆசிரியர் - Editor III

நாடளாவிய ரீதியில் இன,மத,வேறுபாடு இன்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவர் கொடை வள்ளல்  வாமதேவன் தியாகேந்திரனின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு மனிதாபிமான வேலைத்திட்டங்களை தியாகி அறக்கொடை நிதியம் முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அதன் இனைப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைவாக நாடு பூராகவும் பயன்தரு மரக்கன்றுகள் நடுதல்,பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உலர் உணவு விநியோகம், விசேட தேவை உடையோர் மற்றும் நோயாளிகளுக்கான உதவிகள்,குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான  போசாக்கு உணவு வழங்கள் வேலை திட்டம் என பல்வேறு மனிதாபிமான உதவிகளை வாமதேவன் தியாகேந்திரனின் அவர்களின் பிறந்த தினமான  டிசம்பர் 02 ஆந்திகதி 2022 அன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தேவை உடைய மக்கள் தியாகி அறக்கொடை நிதியம்,யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள  காரியாலயதிற்கு வருகை தந்து பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு