வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான மதகை மூடி சீமெந்து தரை அமைப்பு! ஆற அமர நடவடிக்கை எடுக்க தயாராகும் பிரதேசசபை..

ஆசிரியர் - Editor I
வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான மதகை மூடி சீமெந்து தரை அமைப்பு! ஆற அமர நடவடிக்கை எடுக்க தயாராகும் பிரதேசசபை..

யாழ்.வலி, கிழக்குப் பிரதேசசபை ஆழுகைக்குட்பட்ட கரந்தான் சந்தியில் வெள்ள நீர் செல்லும் மதகினை கடைத் தொகுதி கட்டிடம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் மூடி கட்டிய சம்பவம் தொடர்பில் பிரதேசசபை நடவடிக்கை எடுக்கவுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த கடைத் தொகுதி கட்டிடத்தின் உரிமையாளர் கட்டிடத்தின் முன்பக்கமாக உள்ள நிலத்துக்கு சீமந்தினால் மேடை அமைத்துள்ளார்.

அதனோடு வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான அருகில் காணப்பட்ட வெள்ள நீர் வெளியேறும் மதகினையும் சீமெந்தினால் மூடி அடைத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அப் பகுதி மக்களும் 

பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும் உரிமையாளருக்கு தெரியப்படுத்தியும் அவர் அதனை அகற்றுவதற்கு பின்னாடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த மதகு தமது திணைக்களத்துக்கு சொந்தமானது என்பதை அவர் உறுதிப்படுத்தியதுடன்,

சட்டவிரோதமாக மதகினை சீமெந்தினால் மூடி அமைத்தமை தொடர்பில் வலி, கிழக்குப் பிரதேசசபையின் கவனத்திற்கு எழுத்து மூலம் தாம் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனை அடிப்படையாக கொண்டு வலி,கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோசிடம் தொடர்பு கொண்டுகேட்டபோது கடைத் தொகுதியை கட்டுவதற்கான அனுமதி பிரதேச சபையில் பெறப்பட்டது.

ஆனால் முன்புறமாக மதகினை மூடி அமைக்கப்பட்ட சீமெந்து தரைக்கான அனுமதி பிரதேசசபையிடம் பெறப்படவில்லை. ஆகவே வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும்,

அவர்களின் ஆலோசனையுடன் செயலாளரை நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு