தனது பிரத்தியே வகுப்புக்கு வரவில்லை என்பதால் மாணவனை துப்புத் தடியால் அடித்த ஆசிரியை!

ஆசிரியர் - Editor I
தனது பிரத்தியே வகுப்புக்கு வரவில்லை என்பதால் மாணவனை துப்புத் தடியால் அடித்த ஆசிரியை!

தனது பிரத்தியேக வகுப்புக்கு வரவில்லை என்பதற்காக மாணவனை துப்புத் தடியால் ஆசிரியை ஒருவர் தாக்கிய சம்பவம் வவுனியா நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது. 

தரம் 5இல் குறித்த மாணவன் கல்வி பயின்று வருவதுடன் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையிலும் தோற்றவுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவனை தனது பிரத்தியேக வகுப்புக்கு வருமாறு ஆசிரியை ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மாணவன் அவரின் பிரத்தியேக வகுப்புக்குச் செல்லவில்லை. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் மாணவன் மீது தும்புத்தடியால் ஆசிரியை தாக்கியுள்ளதாகவும் 

இதன் காரணமாக மாணவனின் உடலில் தழும்புகள் உள்ளதாகவும் மாணவனின் எதிர்கால கல்வி பாதிப்புக்குள்ளாகும் என்பதால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளவில்லை எனவும் மாணவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு