யாழ்.வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினர் கெடுபிடி! வீதியின் இருபக்கமும் சோதனை சாவடிகளை அமைத்தும், புகைப்படம் எடுத்தும் அச்சுறுத்தல்.

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினர் கெடுபிடி! வீதியின் இருபக்கமும் சோதனை சாவடிகளை அமைத்தும், புகைப்படம் எடுத்தும் அச்சுறுத்தல்.

யாழ்.வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டிருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு செல்லும் வீதியின் இரு பக்கமும் சோதனை சாவடிகளை அமைத்துள்ள இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து பொதுமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றது. 

எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவம் நிலைகொண்டிருக்கும் நிலையில் அதற்கு அருகில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டு பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்  வீதியின் இருபக்கமும் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டதுடன்,

துயிலும் இல்லத்திற்குச் செல்லும் மக்கள் மோசமாக அச்சுறுத்தப்பட்டனர். மேலும் இராணுவ முகாமிற்குள் நின்றுகொண்டு இராணுவத்தினர் பொதுமக்களை தங்கள் தொலைபேசிகள், கமராக்கள் மூலம் புகைப்படம் எடுப்பதையும் அவதானிக்ககூடியதாக இருந்தது. மேலும் ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் அங்கு களமிறக்கப்பட்டுள்ளனர். 

எனினும் மக்கள் அச்சுறுத்தல்களை தாண்டி அதிகளவில் துயிலும் இல்லத்திற்கு வந்திருந்ததை காண முடிந்தது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு