கரும்புலி மில்லர் நினைவிடம், கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றிலும் நினைவேந்தல்...

ஆசிரியர் - Editor I
கரும்புலி மில்லர் நினைவிடம், கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றிலும் நினைவேந்தல்...

நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக

மாவீரர் நாளான இன்று முதல் கரும்புலி மாவீரர் மில்லரின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. 

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருடைய குழுவினர் இந்த நினைவேந்தலை ஒழுங்கமைப்பு செய்திருந்தனர். 

இதன்போது மாவீரர்கள் நினைவாக ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம்

ராணுவத்தின் 522 ஆவது பிரிகேட் நுழைவாயிலில் இன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் தற்பொழுது ராணுவத்தின் 522 வது பிரிகேட் தலைமையகமாக இயங்கி வருகின்ற நிலையில் 

இன்றைய தினம் முன்னாள பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரால் இன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

உடுப்பிட்டி - எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

வடமராட்சி உடுப்பிட்டி - எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் மாவீரர் நாளான இன்று வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் 551வது படைப்பிரிவு முகாம் அமைத்து தங்கியுள்ள நிலையில் துயிலும் இல்லத்திற்கு வெளியே ஈகை சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞசலி செலுத்தப்பட்டிருக்கின்றது. 

இதன்போது குறித்த பகுதியில் வீதியின் இரு பக்கங்களிலும் வீதி மறிப்புக்கள் போடப்பட்டு இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு