தென்பகுதி மீனவா்களின் வாடிகளை பிடுங்கி எறிய இது நேரமல்ல, நேரம் வரும்போது நானே பிடுங்கி எறிவேன்..

ஆசிரியர் - Editor I
தென்பகுதி மீனவா்களின் வாடிகளை பிடுங்கி எறிய இது நேரமல்ல, நேரம் வரும்போது நானே பிடுங்கி எறிவேன்..

மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மருதங்கேணி மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் அதனை மீறி வாடிகளை பிடுங்கி எறிவதற்கு செல்ல கூடாது. 

வாடிகளை பிடுங்கி எறிவதற்கான காலம் இதுவல்ல. அப்படி ஒரு காலம் வந்தால் நானே முத ல் ஆளாக வந்து வாடிகளை பிடுங்கி எறிவேன். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றார். 

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி இன்று யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் முன்பாக முற்றுகை போராட் டம் ஒன்று இடம்பெற்றது. இதன்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடமராட்சி கிழக்கில் அரச காணியில் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை மீறி சுமார் 1500ற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்றொழில் செய்து வருகின்றனர். 

இதனால் எமது மீனவர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக கடந்த ஞாயிற்று கிழமை பிரதமரை சந்தித்து விடயங்களை கூறியிருக்கின்றோம். அதேபோல் கடந்த செவ்வாய் கிழமை புதிய கடற்றொழில் அமைச்சரை 

நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்தித்து விடயங்களை கூறியிருக்கின்றோம். இதனடிப்படையில் கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்கும்படி புதிய கடற்றொழில் அமைச்சர் 

கடற்றொழில் பணிப்பாளருக்கு கூறியிருக்கின்றார். ஆனாலும் அது கடைப்பிடிக்கப்படவில்லை. அதனை க ண்டித்தே இன்று நாங்கள் முற்றுகை போராட்டத்தை நடத்தியிருக்கின்றோம். இதன்போது கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை உரியமுறையில் 

கடைப்பிடிப்பதாகவும், மீறுவோர் மீது சட்டநடவடிக்கை எடுப்பதாகவும் கடற்றொழில் நீரிய  ல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் உறுதிபட கூறியுள்ளனர். ஆகவே நாங்கள் முற்று கை போராட்டத்தை நிறுத்தியுள்ளோம். 

ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் திங்கள் கிழமை தொடக்கம் மு ற்றுகை போராட்டம் நடாத்தப்படும். அது தொடர்ச்சியாகவும் நடாத்தப்படும் என்றார். இதனைதொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களுடன் பேசிய நாடாளுமன்ற 

உறுப்பினர் சுமந்திரன், நிபந்தனைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளார்கள். ஆகவே எமது மீனவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். 

தென்பகுதி மீனவர்களின் வாடிகளை பிடுங்கி எறிவதற்கெல்லாம் போகவேண்டாம். அதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல. பிடுங்கி எறிவதற்கான சந்தர்ப்பம் வந்தால் நானே முன்வந்து வாடிகளை பிடுங்கி எறிவேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு