யாழ்.வலி,வடக்கில் என்ன நடக்கிறது? யாழ்.மாவட்டச் செயலகத்திடம் விளக்கம் கேட்டுள்ள ஜனாதிபதி செயலகம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கில் என்ன நடக்கிறது? யாழ்.மாவட்டச் செயலகத்திடம் விளக்கம் கேட்டுள்ள ஜனாதிபதி செயலகம்..

யாழ்.வலி,வடக்கு பிரதேசசபைக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் பிள்ளையார் குளத்தில் பாரிய மண் அகழ்வு இடம்பெற்றுவருவதாக ஜனாதிபதி செயலகத்துக்கு முறைப்பாடு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும்படி யாழ்.மாவட்டச் செயலகத்திடம் ஜனாதிபதி செயலகம் பணித்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது குறித்த பிள்ளையார் கோயிலின் குளத்தில் இருந்து தனியார் ஒருவர் குளத்தில் தாமரை வளர்க்கப்போவதாக தெரிவித்து குளத்தில் இருந்து சுமார் 200 லோட்டுக்கு அதிகமான மணல் 

வெளி இடங்களில் விற்பனை செய்யப்பட்டதாக முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுடிருந்தார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த குளத்தில் கால்நடைகள் நீர் அருந்தும் நிலையில் பாரிய குழிகள் தோண்டப்பட்டு மண் அகழ்வு இடம் பெறுகின்றது. 

இதனால் கால்நடைகள் குளத்துக்குள் மூழ்கும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ஊர் மக்கள் சிலர் குறித்த குளத்தில் மணல் அகழ்பவர்களை கேட்டதற்கு பிரதேச சபை தவிசாளர் தமக்கு அனுமதி தந்ததாக தெரிவித்தே மணல் ஏற்றிச் சென்றதாக ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த விடையம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு எழுத்து மூலமாக விளக்க ஒன்றை அளிக்குமாறும் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பில் முறைபாட்டாளருக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் தெரியப்படுத்துமாறு ஜனாதிபதின் பொதுமக்கள் தொடர்புச் செயலாளரினால் எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு