வடமாகாணத்தில் நுண்நிதி கடன்களால் 59ற்கும் மேற்பட்டோா் தற்கொலை செய்துள்ளனா்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் நுண்நிதி கடன்களால் 59ற்கும் மேற்பட்டோா் தற்கொலை செய்துள்ளனா்..

வடமாகாணத்தில் நுன்நிதிக்கடன் செயற்பாட்டினால் 59 க்கும் மேற்பட்டதற்கொலைகள் இடம்பெற்றுள்ளதுடன், தொடர்ந்தும் மக்கள் சௌகரியங்களை எ திர்கொள்வதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புக்களின் சம்மேளனத்தலைவர் அன்ரனி கலிஸ்சியஸ்  தெரிவித்துள்ளாா். 

நுன்நிதிக்கடன்களால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில்  நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர் வடமாகாணத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு நுன்நிதிக்கடன்கள் உதவியாக இருந்தாலும் எதிர்காலத்தில் அதனூடாக பல அசெகரியங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

அதாவது வடமாகாணத்தில் இந்த நுன்நிதிக்கடன் செயற்பாடுகளினால் 59 இ ற்கும் மேற்பட்ட தறகொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 19வரையான தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இவ்வாறு நுன்நிதிக்கடன்களால் அன்றாடம் பல்வேறுபட்ட பிரச்சனைகள் உருவாகி வருகின்றன.

இது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பொருட்டு எதிர்வரும் 14ம்திகதி வடமாகாணத்;தின்        அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வுப்பேரணிகளை முன்னெடுக்க இருப்பதாகவும் கிளிநொச்சி மாவட்டத்தின் விழிப்புணர்வுப்பேரணி கரடிப்போக்குச்சந்தியில்  இருந்து மாவட்டச்செயலகம் வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை இதன்போது கடன்பொறிக்குள் சிக்கித்தவிர்க்கும் மக்கள் கடன்களை மீளச்செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் காலஅவகாசத்தை வழங்குவதுடன், அதற்கான வட்டிகளையும் இரத்துச்செய்து மீளச்செலுத்த அனுமதிக்கப்படவேண்டும்.

கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச்செலுத்தமுடியாமல் வட்டிக்கு வட்டியும் எடுத்த கடன்தொகைக்கு மேலான தொகையை அறவிடுவதை நிறுத்தவேண்டும்,

நுன்கடன் நிதி நிறுவனத்தின் வட்டி வீதங்களைக்குறைக்கவேண்டும்.

அரச வங்கிகள் ஊடான கடன்களுக்கு நிபந்தனைகளை குறைக்கவேண்டும்.

கிராம மட்டங்களில் இருக்கின்ற அமைப்புக்கள் ஊடாக கடன்களைப் பெறுவதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை தாம் முன்வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு